விஷ்ணுகாந்த் - சம்யுதா விவகாரம், இதெல்லாம் கேவலமா இல்லையா? - வெளுத்துவங்கிய ராஜலட்சுமி!
சீரியல் நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுதா விவகாரம் குறித்து பாடகி ராஜலட்சுமி பேசியுள்ளார்.
காதல் திருமணம்
தமிழ் சீரியல் நடிகர்களான சம்யுக்தாவும், நடிகர் விஷ்ணுகாந்தும் சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள். இவர்கள் 7 மாதங்களாக காதலித்து, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு இவர்கள் 15 நாட்களில் இருந்து சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் இருந்து இருவரும் நீக்கிவிட்டனர். மேலும், இவர்கள் இருவரும் அவரவர் சமூக வலைதள பக்கங்களில் மாறி மாறி குற்றம் கூறி இருவரின் சண்டையை ஊருக்கே தெரியப்படுத்தி வந்தனர்.
கிழித்தெடுத்த விஜயலட்சுமி
இந்நிலையில், இருவரின் விவகாரம் குறித்து பாடகி ராஜலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், "இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் கொண்டு வந்தது கேவலமாக இல்லையா, தங்களுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் அனைவரும் பார்க்கும் படி சோசியல் மீடியாவில் பேசுவது முறையா?.
இதற்கு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பக்குவமில்லாமல் இப்படி பேசி மற்றவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதைபோல் மனதை பலவீனமாக வைத்துக் கொள்ளக் கூடாது" என்று இவர் ஆவேசமாக பேசியுள்ளார்.