இனி நடிகை குறித்து அவதூறு பேசமாட்டேன் - மன்னிப்பு கேட்டார் சீமான்!

Vijayalakshmi Tamil Cinema Naam tamilar kachchi Seeman Supreme Court of India
By Sumathi Oct 08, 2025 09:28 AM GMT
Report

சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.

நடிகை வழக்கு

சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை 2011-ல் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

seeman

சீமான் இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

சீமான் மன்னிப்பு

மன்னிப்பு கோர தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும் இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இனி நடிகை குறித்து அவதூறு பேசமாட்டேன் - மன்னிப்பு கேட்டார் சீமான்! | Seeman Apologizes In Actress Case Supreme Court

இந்நிலையில், சீமான் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், எனது சொல், செயல்களால் நடிகைக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

இனி நடிகை குறித்து அவதூறாகப் பேசமாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.