தவெக மாநாடு - அண்ணனாக விஜய்க்கு சீமான் செய்த அட்வைஸ் இதுதான்!

Vijay Seeman Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 09, 2024 09:30 AM GMT
Report

தவெக மாநாடு குறித்து விஜய்க்கு சீமான் அறிவுரை வழங்கியுள்ளார்.

தவெக மாநாடு

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் கட்சியை தொடங்கினார். 

vijay tvk party

இக்கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடத்த உள்ளார். மாநாட்டிற்கு மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்

சீமான் அட்வைஸ்

இந்நிலையில் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் என்ற படம் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

seeman

விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "இந்த மாதிரி பேச்சுக்கள் எழுந்தப்போது ஒரு அண்ணனாக நான் அவருக்கு சொன்னது என்னவென்றால் மாநாட்டிற்கு யாரையும் அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் தேவையில்லாத பிரச்னைகள் வரும்.

கட்சி முதல் மாநாடு தொடங்கும் போது கட்சி கொள்கை, லட்சியம் என்ன என்பதை விஜய் தான் பேச வேண்டும். கட்சி வளர்ந்த பிறகு மற்ற கட்சியினரை கூப்பிட்டு பேச வைக்கலாம்" என பதிலளித்தார்.