மன்சூர் விளையாட்டா, காமெடிக்கு பேசியிருப்பார் - சீமான் நம்பிக்கை!
மன்சூர் த்ரிஷா குறித்து நகைச்சுவைக்கு பேசியிருப்பார் என சீமான் தெரிவித்துள்ளார்.
மன்சூர்-த்ரிஷா விவகாரம்
நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை எனப் பேசியிருந்தார்.
தொடர்ந்து நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீமான் கருத்து
விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் வேண்டும் என்று பேசி இருக்க மாட்டார். விளையாட்டாக, நகைச்சுவைக்கு கூட இருக்கலாம்.
அதனால் யாருடைய மனதாவது காயம் பட்டிருந்தால் அவர் அதற்காக வருத்தம் தெரிவித்து இருக்கலாம். மன்சூர் அலிகான் தவறாக பேசி இருந்தால் அதற்காக நானே வருந்துகிறேன். நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
காமெடி என்ற பெயரில் அடுத்தவரின் மனம் புண்படும்படி பேசக் கூடாது எனவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் இன உணர்வு மிக்க தமிழன், நகைச்சுவைக்கு பேசியிருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.