ரகசியமா கூட்டணிக்கு பேசினாங்க..ஆனால் இதுதான் முடிவு - சீமான் ஆவேசம்!

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Sumathi Feb 26, 2024 07:13 AM GMT
Report

மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

 சீமான் 

திருச்சி, நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை.

seeman

தனித்து போட்டி என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்துவிட்டோம். எனினும், கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசியது உண்மைதான். ரகசியமாகப் பேசினார்கள். அவர்கள் ரகசியமாகப் பேசியதை பொதுவெளியில் சொல்வது மாண்பாக இருக்காது.

மன்சூர் விளையாட்டா, காமெடிக்கு பேசியிருப்பார் - சீமான் நம்பிக்கை!

மன்சூர் விளையாட்டா, காமெடிக்கு பேசியிருப்பார் - சீமான் நம்பிக்கை!

மக்களவை தேர்தல்

கூட்டணி பேசியதை எல்லாம் எங்கள் மன்னார்குடியில் கூப்பிட்டார்கள், மாயவரத்தில் கூப்பிட்டார்கள் என பொதுவெளியில் சொல்லிக்கொண்டா இருக்க முடியும். வாக்குப் பதிவு இயந்திரத்தை தயாரித்து தரும், ஜப்பானே அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் அமெரிக்காவே இதை பயன்படுத்துவதில்லை.

ரகசியமா கூட்டணிக்கு பேசினாங்க..ஆனால் இதுதான் முடிவு - சீமான் ஆவேசம்! | Seeman About Contest Lok Sabha Elections

வாக்குப்பதிவு முடிந்தபின் குறைந்தது 40 நாட்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மையங்களில் பூட்டிக்கிடக்கும். இப்படியான நிலையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் எனக் கூறுகிறார்கள். நான் இங்கு பேசுவதை டெல்லியில் இருந்து உங்களால் ஒட்டுக் கேட்க முடியும் என்றால், வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாதா என்ன?

தேர்தல்களே நேர்மையான முறையில் நடக்கவில்லை என்றால் நேர்மையான ஆட்சி எங்கிருந்து நடைபெறும்?”எனத் தெரிவித்துள்ளார்.