பாதுகாப்பு குறைபாடா..? 4 அடுக்கு பாதுகாப்பை மீறி புகை குண்டு வீச்சு உள்ளே வந்தது எப்படி..?
பொதுவாக நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில், அதனை மீறி எவ்வாறு உள்ளே புகை குண்டு கொண்டுவந்தார்கள் என்ற கேள்வி பெரும்பாலும் எழுந்துள்ளது.
மக்களவை
விவகாரம் நேற்று நடந்த மக்களவை விவகாரம், நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எவ்வாறு மக்களவைக்குள்ளே மர்ம புகை பொருளை கொண்டு வந்தனர் என்பதே ஆகும்.
சாதாரணமாக, நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். அதனை மீறி எவ்வாறு உள்ளே வந்தது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகும். ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவே இந்த குழுவை அமைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.
பணியில் ஆட்கள் குறைபாடா..?
ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது லலித்ஜா என்ற ஆறாவது நபரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நேற்று பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு தொடர்புடைய இணை இயக்குனர் பதவி கடந்த ஒரு மாத காலமாக காலியாக உள்ளதும் தெரியவந்துள்ளது. வழக்கமாக 301 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நேற்று 176 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர்.