திருப்பதியில் பிரதமர் மோடி; பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உளவுத்துறை DSP திடீர் மரணம் - என்ன நடந்தது?
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உளவுத்துறை டி.எஸ்.பி. திடீர் மரணம் அடைந்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். பின்னர் அவர் சாலை மார்க்கமாக திருமலைக்கு வந்து, அங்குள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
இதனையடுத்தது நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து, மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பலத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி.எஸ்.பி மரணம்
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, மத்திய உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி கிருபாகர் என்பவர் திருப்பதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக க்ரிபாகருடன் இருந்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்ற போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.