1000 ஆண்டுகள் பழமையான கோயில் - திருப்பணியின்போது உறைய வைத்த சம்பவம்!
ஆயிரம் ஆண்டு பழமையான கோயின் திருப்பணியின்போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழமையான கோயில்
கடலூர் மாவட்டத்தில் சி.என்.பாளையம் என்ற பகுதியில் ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது . இக்கோயில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் கோயில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி, அர்த்தம் மண்டபம் பகுதியில் கருங்கற்களால் தரை அமைக்கும் பணியில் கருங்கற்கள் அகற்றப்பட்டது.
அப்போது கோயிலில் சுரங்கம் போன்ற அமைப்பு இருப்பதை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும், சுரங்க அமைப்பு பல ஆண்டுகளாக மூடிக் கிடந்ததால் ஆபத்து ஏதேனும் இருக்கும் எனக் கருதி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பாதாள அறை
தகவலின் அடிப்படையில் வந்த கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தொல்லியல் ஆலோசகர், மண்டல ஸ்தபதி மற்றும் கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் சுரங்க அமைப்பை ஆய்வு செய்தனர்.
அப்போது, சுமார் 10 அடி அகலம் கொண்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பாதாள அறை என்பது கோயிலுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து அந்த கோவிலில் ஆய்வு செய்து வருகின்றனர். இதே போன்ற பாதாள அறைகள் அரியலூர் மற்றும் தலைவாசல் போன்ற பகுதியில் உள்ள கோயில்களிலும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
