அக்காவுடன் தகாத உறவு - ஆத்திரத்தில் தம்பி செய்த கொடூரம்!
அக்காவுடன் தகாத உறவில் இருந்த நண்பரை தம்பி கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
திண்டுக்கல், பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(44). இவர் கணவனை இழந்து வசித்து வருகிறார். இந்நிலையில், சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருடனான தொடர்பை துண்டிக்குமாறு தம்பி கருப்புச்சாமி (36) அக்காவிடம் கூறியுள்ளார்.
ஆனால், இருவரும் கேட்காமல் உறவை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், சுரேஷ் தனது நண்பர் மணிமாறன் (25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சுரேஷை, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொலை
அங்கு, மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பதால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் படி தொடர்ந்த விசாரணையில், ஆத்திரம் கொண்ட, அவரது சகோதரர் கருப்புசாமி சுரேஷின் நண்பரான மணிமாறனை வைத்து
கருப்புசாமி மது பாட்டிலில் விஷம் கலந்து சுரேஸ்க்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.