உலகிற்கு தெரியாமல் ரகசியம் காத்து வைக்கப்பட்டுள்ள இந்த இடங்கள் பற்றி தெரியுமா?

World
By Vinothini Sep 30, 2023 12:30 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

மேப்லயே இல்லாத ரகசிய இடங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

கூகுள் மேப்

உலகில் எந்த மூலை முடுக்கிற்குள் செல்லவேண்டும் என்றாலும் கூகுள் மேப் பார்த்தல் போதும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அத்தகைய கூகுள் மேப்பிலேயே இல்லாத சில இடங்களும் உண்டு, அவை பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பல நாட்டில் உள்ள இந்த இடங்களை ரகசிகமாக வைத்துள்ளது.

அதில் பிரான்ஸ் நாட்டில் உள்ள கட்டெனோம் அணு மின் நிலையம், இது பாதுகாப்பு காரணமாக இந்த அணு உலையை கூகுள் மேப்பில் பார்க்க முடியாதவாறு முழுப் பகுதியும் பிக்சலேட் செய்யப்பட்டுள்ளது.

secret-places-in-world-has-no-route-in-google-map

கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் அமைந்துள்ளது கோஸ் சர்வதேச விமான நிலையம். சுற்றுலாப் பயணிகளின் புகழிடமாக விளங்கும் இந்த விமான நிலையம் கூகுள் மேப்பில் மிகவும் மங்கலாக தெரியும்.

பிரபல யூடியூபர் தவறான செய்தியை வெளியிட்டதால் 8 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றன் அதிரடி!

பிரபல யூடியூபர் தவறான செய்தியை வெளியிட்டதால் 8 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றன் அதிரடி!

ரகசிய இடங்கள்

இதனை தொடர்ந்து, அலாஸ்காவில் இருக்கும் அம்சித்கா தீவை பாதிக்குமேல் தெளிவாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது. 1950 -களின் பிற்பகுதியில் நிலத்தடி அணு சோதனைக்காக அமெரிக்க அணுச்சக்தி ஆணையத்தால் அம்சித்கா தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பகுதியான இந்த தீவு கதிரியக்க பொருட்களின் கசிவுக்காக தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.

secret-places-in-world-has-no-route-in-google-map

ரஷ்யாவில் உள்ள ஜீனெட் தீவு, கூகுள் மேப்பில் இப்படி ஒரு இடமே இல்லை என்று வரும், இது ரஷ்யாவின் ராணுவத் தளம் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மார்க்கூல் அணு தளத்தை, கூகுள் மேப்பில் தேடினால், அப்பகுதி முழுவதும் பிக்சலேட்டாக தெரியும்.

ஜப்பான் நாட்டின் மினாமி டோர்ஷிமா தீவில் அமைந்துள்ள மினாமி டோர்ஷிமா விமான நிலையத்தையும் தெளிவாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது. அந்நாட்டின் கடற்படையினர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருவதால், அதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.

மொரோவா தீவு, பிரான்ஸில் அமைந்துள்ளது. அப்பகுதியில் 1966 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அணுச்சக்தி சோதனைகள் நடைபெற்றதால், அப்பகுதி கூகுள் மேப்பில் மங்கலாக மட்டுமே தெரியும்.

அலாஸ்காவில் இருக்கும் ககோனா பகுதியில் உயர் அதிர்வெண் கொண்ட ஆரோரல் ஆராய்ச்சி மையம் உள்ளது. அமெரிக்காவின் விமானப்படை, கடற்படை உதவியுடன் ஆராய்ச்சிகள் நடப்பதால் கூகுள் மேப்பில் தெளிவாக தெரியாது.