கேரவன் கொடூரம்; ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை..ராதிகா பகீர் தகவல்!

Raadhika Sexual harassment India
By Swetha Aug 31, 2024 10:30 AM GMT
Report

கேரவனில் நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிப்பதாக நடிகை ராதிகா குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை ராதிகா  

கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் ஆடிபோயுள்ளது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமானவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கேரள திரைபடங்களில் பல ஆண்டுகளாக நடித்து வந்துள்ளார்.

கேரவன் கொடூரம்; ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை..ராதிகா பகீர் தகவல்! | Secret Camera In Caravan Says Actress Raadhika

இந்த பாலியல் குற்றசாட்டுகள் குறித்து கேரளா செய்தி நிறுவணம் ஒன்றுக்கு ராதிகா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர்.

பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து,

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

ரகசிய கேமரா 

அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன்.

கேரவன் கொடூரம்; ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை..ராதிகா பகீர் தகவல்! | Secret Camera In Caravan Says Actress Raadhika

படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு.

இன்று சில நடிகைகள் எங்களுக்கு எந்த சம்பவமும் இதுபோன்று நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. அவர்களுக்கு நடந்தது என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.