மறுவீடு வந்த போலீஸ் மாப்பிள்ளை - டிரஸ்ஸை கிழித்து விரட்டி அடித்த பெண் வீட்டார்!
பெண்ணை ஏமாற்றிய மாப்பிள்ளையை பெண் வீட்டார் விரட்டி அடித்துள்ளனர்.
2வது திருமணம்
கன்னியாகுமரி, கிராத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் M.Com. முடித்துவிட்டு CA, படித்து வருகிறார். மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டிங் அலுவலகத்திலும் பணிபுரிந்து வருகிறார்.
இதற்கிடையில் 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராஜேஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் காதலாக மாறி பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் அளவிற்கு ராஜேஷ் நெருக்கமாகியுள்ளார்.
தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து ராஜேஷிடம் அவரின் பெற்றோரை அழைத்து வர கூறியுள்ளனர். ஆனால், அவர் தான் சென்னையில் வசித்து வருவதாகவும், தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை எனக் கூறியுள்ளார். இந்நிலையில், கிறிஸ்தவ ஆலயத்தில் ராஜேஷுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்துள்ளனர்.
சிக்கிய காவலர்
இதனையடுத்து, மறுவீட்டிற்கு வந்திருக்கையில் பெண்ணின் வீட்டின் அருகில் வசிக்கும் பெண் காவலர் ஒருவர் ராஜேஷை பார்த்துள்ளார். களியக்காவிளையில் இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். மேலும், இவர் ஏற்கனவே திருமணமானவர் தானே என சந்தேகித்துள்ளார்.
பின்மணமக்களை போட்டோ எடுத்து காவலர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் போட்டுள்ளார். அதனைப் பார்த்து பலர் ஏற்கனவே இவருக்கு திருமணமாகி விட்டதே எனக் கூறி அடுத்தடுத்து கால் செய்துள்ளனர். இதையறிந்த பெண் வீட்டார் ஆடைகளை எல்லாம் கிழித்து அவரை அடித்து உதைத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்த போலீஸார் ராஜேஷை மீட்டுச் சென்றுள்ளனர். தொடர் விசாரணையில், இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. உடனே வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.