மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி.. தவித்த 3வயது சிறுவன் - அடுத்து நடந்த சம்பவம்!

Tamil nadu Perambalur trichy
By Swetha Dec 17, 2024 05:15 AM GMT
Report

சிறுவனின் மூச்சுக்குழாயில் கொலுசு திருகாணி சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் 

பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டி பகுதியை சேர்ந்த 3 வயதான சிறுவன் ஒருவன் தவறுதலாக கொலுசிலிருக்கும் திருகாணியை விழுங்கி இருக்கிறார். இதையடுத்து அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி.. தவித்த 3வயது சிறுவன் - அடுத்து நடந்த சம்பவம்! | Screw Got Strucked In A 3 Year Old Boy Wind Pipe

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று சிக்கியுள்ளது என்று தெரியவந்தது. இந்த நிலையில், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிறுவனை, அவரது பெற்றோர் அறுவை சிகிச்சைகாக அனுமதித்தனர்.

பெண்களே கவனம்; நுரையீரலுக்குள் சிக்கிய மூக்குத்தி - மிரண்டு போன மருத்துவர்கள்!

பெண்களே கவனம்; நுரையீரலுக்குள் சிக்கிய மூக்குத்தி - மிரண்டு போன மருத்துவர்கள்!

திருகாணி 

சிக்கலான இடத்தில் இருந்த திருகாணியை நவீன கருவி மூலம் மருத்துவர்கள் குழு சாதுர்யமாக அகற்றினர். தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி.. தவித்த 3வயது சிறுவன் - அடுத்து நடந்த சம்பவம்! | Screw Got Strucked In A 3 Year Old Boy Wind Pipe

திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.