பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மகன் - ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை!
மகனுக்கு குப்பை சேகரிக்கும் தந்தை ஐபோன் பரிசளித்தது நெகிழ்ச்சி அளித்துள்ளது.
தேர்வில் வெற்றி
சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு கணக்கில் 'தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குப்பை சேகரிக்கும் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரது பேச்சை சுற்றி நிற்பவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். அதாவது, பொதுத் தேர்வில் தனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதற்காக ஐபோன் பரிசளித்ததாக அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.
ஐபோன் பரிசு
மேலும், தனக்காக ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றும், தன் மகனுக்காக ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் 16 போன் ஒன்றும் வாங்கியதாக பெருமையாக கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். “பெற்றோரின் பாசம் இதுதான்" என்று ஒருவரும் "ஐபோன் என்பது கவுரவ சின்னமாக உள்ளது. ஆனால், இந்த மனிதருக்கு அது பாசமாக பெருமையாக உள்ளது” என்று இன்னொருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்த ஆண்டின் சிறந்த தந்தை" என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார். "தந்தையின் பாசத்தை இந்த வீடியோ எடுத்துக் காட்டுகிறது” என்று ஒருவர் கூறியிருக்கிறார்.