ரீல்ஸ் மோகத்தால் 8 மாத கைக்குழந்தையை விற்று ஐபோன் 14ஐ வாங்கிய தம்பதி - கொடூர சம்பவம்!

iPhone West Bengal Crime
By Jiyath Jul 27, 2023 05:07 PM GMT
Report

குழந்தை விற்ற தம்பதிகள்

மேற்குவங்க மாநிலம் பர்கனஸ் என்ற மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர்கள் ஜெய்தேவ் மற்றும் அவரது மனைவி சதி என்ற தம்பதிகள். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் 8 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளது. இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

ரீல்ஸ் மோகத்தால் 8 மாத கைக்குழந்தையை விற்று ஐபோன் 14ஐ வாங்கிய தம்பதி - கொடூர சம்பவம்! | West Bengal Couples Sold Baby And Buys Iphone Ibc

இவர்கள் ஐபோனில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட விரும்பியுள்ளனர். இதனால் தங்களது 8 மாத குழந்தையை விற்று ஐபோனை 14ஐ வாங்கியுள்ளனர் இந்த கொடூர தம்பதியினர். பின்னர் ரீல்ஸ் வீடியோக்களை ஐபோனில் படமெடுத்து பதிவிட்டுள்ளார். குழந்தையை சில நாட்களாக காணாமல் இருந்தாலும், அவர்களிடம் புது ஐபோன் இருந்ததாலும் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

போலீசார் கைது

இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த போலீசார் இந்த தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர் . அதில் குழந்தையை விற்று ஐபோன் வாங்கியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக தங்களது 7 வயது பெண் குழந்தையையும் விற்க இருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாய் சதியை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண்ணையும் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் சதியிதன் கணவர் ஜெய்தேவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.