1.5 கோடி சம்பளம் - அதுவும் அழகான தீவில் - ஆனா ஒரே ஒரு கண்டிஷன் தான்..?
ஆழகான தீவு, தங்குமிடம் போன்றவற்றுடன் சேர்த்து 1 கோடி ரூபாய் மாத வருமானம் அளித்தால், அதனை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா..?
தீவில் வேலை
உடனே கேட்டால், நாம் அனைவருக்குமே எங்கு என்ன வேலை என்ற ஆர்வம் எழுவது இயல்பே. ஸ்காட்லாந்து நாட்டில், அமைந்துள்ள தீவு ஒன்றில் தான் வேலை செய்ய ஆட்களை தேடி வருகின்றது அந்நாட்டின் அரசு.
ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகளில் பணிபுரிய தான் ஆட்களை தேடுகிறது அரசு. அந்த தீவில் பணிபுரிவதற்காக மருத்துவர்களும், ஆசிரியர்களும் தேவைப்படுகிறார்களாம்.
வெறும் 40 மணி நேரம்
தான் இந்த தீவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பிப்பவர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆரவம் கொண்டவராகவும், கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும் என்ற சிறு கண்டிஷன் மட்டுமே உள்ளது.
அப்படி அனுபவம் இருக்குமேயாயின் இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்பட்டு, மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெறும் 40 மணி நேரம் மட்டுமே ஒரு வாரத்தில் பணியாற்றினால் போன்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இங்கு மொத்தமாக இருக்கும் 5 குழந்தைகளுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களும் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு வருடம் சம்பளமாக கிட்டத்தட்ட சுமார் 62 லட்சம் ஊதியமாகவும், அத்துடன் சேர்த்து சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.