தாண்டவமாடும் குரங்கம்மை திரிபு - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
குரங்கம்மை திரிபு வீரியம் அடைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்கம்மை
காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது பாகிஸ்தானிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தாண்டில் மட்டும் காங்கோவில் சுமார் 18 ஆயிரம் பேருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டதாகவும், அதில் 615 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள விஞ்ஞானிகள், குரங்கம்மை வைரஸ் பெரியம்மை தொற்றில் இருந்து உருவாகியுள்ளது.
அதிவேக உருமாற்றம்
50 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரியம்மை தொற்று பரவியபோது, தடுப்பூசி செலுத்தப்பட்டு படிப்படியாக தொற்று முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது குரங்கம்மை தொற்றாக உருவெடுத்துள்ளது. குரங்கம்மையை பற்றி ஆராய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
அதன் திரிபு அதிவேகமாக உருமாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எம் பாக்ஸ் தடுப்பதற்குள் வேகமாக பரவுகிறது; கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு திறன் கொண்டர்களை எளிதில் தாக்குவதுடன், உயிரிழக்கும் அபாயத்தையும் உருவாக்குவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.