பூமி போன்று மற்றொரு உலகம்..விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம் -மனிதர்கள் வாழ முடியுமா?
மனிதர்கள் வாழ உகந்த மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூமி
சூரியக் குடும்பத்தை மையமாகக் கொண்டு பூமி உள்ள 9 கோள்கள் உள்ளது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளாக உள்ளது பூமி. இன்னும் 400 கோடி ஆண்டுகளில் சூரியன் அழிந்துவிடும். அப்படி நடந்தால் நமது பூமியும் அழிந்துவிடும்.
இந்த நிலையில்,நாம் வாழும் பூமியைத் தாண்டி, வேறு ஒரு கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இயற்பியல் துறையில் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நாட்கள் வாழ ஆசை.. பாக்டீரியாவை உடலில் செலுத்திக்கொண்ட விஞ்ஞானி - ஆராய்ச்சியில் நடந்த பயங்கரம்!
இது குறித்து விஞ்ஞானி மைக்கேல் கிரெட்டிக்னீர் என்பவர் கூறுகையில், நமது சூரிய மண்டலத்தைத் தாண்டி, மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகம் உள்ளது. ஹெச்டி 20794 டி எனப்படும் இந்த கிரகம், நமது பூமியிலிருந்து, 20 ஒளி ஆண்டுகள், அதாவது 180 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மற்றொரு உலகம்
மேலும் போதிய வலுவில்லாமல் சிக்னல் இருந்ததால், கிரகம் இருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று விஞ்ஞானி மைக்கேல் கிரெட்டிக்னீர் கூறினார். ஹெச்டி 20794 டி கிரகம்,பூமியை விட 6 மடங்கு அதிக அளவுகொண்ட தாக உள்ளது.
இந்த கிரகத்தின் மேல் பகுதியில் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூரியனைப் மற்ற கோள்கள் சுற்றிவருவதைப் போல் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து இது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ளனர்.