5000 ஆண்டுகளாக கெட்டுப் போகாத எகிப்து மம்மி உடல்கள் - இந்த பொருள் தான் காரணமாம்!
5000 ஆண்டுகளுக்குப் பின்னரும் கெட்டுப் போகாத எகிப்து மம்மி உடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எகிப்து
உலக அதிசயங்களில் ஒன்றாகப் பிரமிடுகள் உள்ளது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை மாறாமல் உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் பிரம்மாண்டமாகப் பிரமிடுகள் நிமிர்ந்து நிற்கிறது.
இதில் இறந்து 5,000 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் எகிப்து அரசர்களின் உடல்கள் இந்த பிரமிடுகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இன்றளவும் அரசர்களின் உடல்கள் கெட்டுப் போகாமலிருந்தது ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மம்மிபிகேசன் எனப்படும் பதப்படுத்தல் கி.பி 4 ஆம் நூற்றாண்டில் எகிப்தியர்கள் பின்பற்றினர். மம்மிஃபிகேஷன் செயல்பாட்டில் முதலில் மூளை போன்ற சிதைவடையக்கூடிய உட்புற உடல் பாகங்கள் அகற்றப்படுகின்றன.
மம்மி உடல்கள்
ஒரு நபரின் மையமாக நம்பப்படும் இதயத்தைத் தவிர அடிவயிற்றின் அனைத்து உறுப்புகளும் அகற்றப்பட்டன.அடுத்த கட்டமாக உடலில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் நீக்கி, உடலைப் பாதுகாக்கும் மற்றும் உலர்த்தும் கெட்டுப்போகாமல் இருக்க ஒரு வகை உப்பை உடல் கொண்டு கைத்தறி துணியால் மூடுவது.
மேலும் உடல்களில் பதப்படுத்தும் எண்ணெய், மெழுகு, வாசனைத் திரவியங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இந்த வாசனை பொருட்கள் உடல்கள் சிதைவடையாமல் பாதுகாத்து வைத்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.