வெளுத்து வாங்கும் ஃபெஞ்சல் புயல்..பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ஃபெஞ்சல்’ புயல்
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்கிறது. ‘ஃபெஞ்சல்’ புயல் நாளை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் , தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால்,
இன்று தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் கரையை கடந்தாலும், ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது . மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்கவைக்க பட்டுள்ளனர்.
பள்ளிகள்
அதுமட்டுமில்லாமல் சில பள்ளிகள் சேதமடைந்துள்ளது . இந்த நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “
சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.