விபத்தில் உயிரிழந்த மாணவன்.. பள்ளி மாணவர்கள் காலில் விழுந்து கதறி அழுத தந்தை!
பேருந்தில் இருந்து விழுந்து இறந்த மாணவனின் தந்தை கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
மாணவன்
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பயின்று வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைலாஷ் தேவனாம்பட்டினம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பயனித்துள்ளர். இதனிடையே வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகின்றது.
இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் மாலை சீக்கரமாக வீட்டிற்கு செல்ல முடியாமல் போய்விடுகிறது. இதில் மழை காரணமாக பல மாணவர்கள் அவசரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்றனர்.
அந்த வகையில் மாணவன் கைலாஷும் பயனித்துள்ளார். படியில் நின்றிருந்த மாணவன் கைலாஷ் தவறி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் தலைமீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலரிந்து வந்த போலிசார் உடனடியாக உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அழுத தந்தை
மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அவருடைய பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவன் கைலாஷ் பயின்று வந்த பள்ளியில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
படில நிக்காதீங்க... படிப்புதான் முக்கியம்: மாணவர்கள் காலில் விழுந்து கதறிய மாணவனின் தந்தை pic.twitter.com/q2RCGFvDrD
— Indian Express Tamil (@IeTamil) November 28, 2024
அதில் மாணவனின் தந்தை கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் கைகூப்பி கதறி அழுத அவருடைய தந்தை 'பசங்களா தயவு செஞ்சு படியில் நிக்காம உள்ள போயிடுங்க... என் புள்ள போய்ட்டான் பா.
எப்ப பஸ்ஸில் ஏறினாலும் படிக்கட்டில் நிற்காதிங்கப்பா. உங்க கால்ல விழுந்து கேட்கிறேன்பா' என கண்ணீருடன் அழுதோடு, திடீரென தரையில் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கோரிக்கைவிடுத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியது.