இன்று பள்ளிகள் திறப்பு; அரசு அதிரடி முடிவு - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
இன்று (ஜூன் 10) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் இன்று கோடை விடுமுறைக்குப் பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. தொடர்ந்து, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதுதவிர புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும்.
மேலும், ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம்.
தனித்திறன் பயிற்சி
இதற்கிடையில், 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சிக்கு தனியாக பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உணவு இடைவேளைகளில் சிறார் இதழ் வாசித்தல் மற்றும் புத்தக வாசிப்புக்கு தனியாக பாடவேளை. 6 - 9ம் வகுப்பு வரை இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாடு உள்ளிட்ட தனித்திறனுக்கு பாடவேளைகள்.
1 முதல் 3ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள். மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள் போன்றவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.