828 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு - அதிரவைக்கும் காரணம்?
828 மாணவர்கள் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதை பொருள் பயன்பாடு
திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில்,
திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சோதனை நடத்தியது. மேலும் அங்குள்ள மாணவர்களிடையே பரிசோதனை நடத்தினர்.
எயிட்ஸ் பாதிப்பு
அதில், 828 மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் உயிரிழந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர். இதனால்தான் தொற்று பரவியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து மாணவர்கள் படிக்க சென்றுள்ளனர்.
அவர்களை சொந்த மாநிலத்திற்கு திரும்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.