மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆகஸ்ட் 5-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாப்பி நியூஸ்..
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா. ஜூலை 26-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில், தூத்துக்குடியில் 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
விடுமுறை அறிவிப்பு
தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தூய பனிமயமாதா பேராலய விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 10-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.