விழாக்கோலம் பூண்டது மதுரை; மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Madurai Madurai Meenakshi Temple
By Swetha Apr 15, 2024 02:18 PM GMT
Report

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுரை விழா

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கோடி ஏற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழா நாட்களில் சுவாமி அம்பாள் வீதிகளில் உலா வருகிறார்.

விழாக்கோலம் பூண்டது மதுரை; மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! | Kallaghar Festival Madurai Local Holiday

அப்போது மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும். மேலும், ஏப்ரல் 21ம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22ம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.

கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்..!

கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்..!

உள்ளூர் விடுமுறை

ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

விழாக்கோலம் பூண்டது மதுரை; மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! | Kallaghar Festival Madurai Local Holiday

இந்நிலையில்,இந்த விழாவுக்கு ஏராளமானோர் வருகை தருவர் என்பதால் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.