பள்ளி வகுப்பறையை ஜவுளிக்கடையாக மாற்றிய ஆசிரியர்கள் - வைரலாகும் வீடியோ!
ஆசிரியர்கள் பள்ளியில் சேலை வாங்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
அரசு பள்ளி
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி என இரண்டும் இருக்கின்றது. இந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து அதிகமான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.
இங்கு மொத்தமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றது வருகின்றனர். இங்கு பள்ளி வேலையில் மதிய நேரத்தில், புடவை வியாபாரி ஒருவர் ஆசிரியர்களுக்கு புடவை வியாபாரம் செய்துள்ளார். இது குறித்து மக்கள் புகாரளித்துள்ளனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், அந்த பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி கூறுகையில், " வியாபாரி ஒருவர் பள்ளியில் புடவை வியாபாரம் செய்ய அனுமதி கேட்டார். பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வெளியில் சென்ற பின் ஆசிரியர்கள் வெளியே வரும் வேலையில் வியாபாரம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அவர் மதிய வேலையில் வந்து ஆசிரியர்களுக்கு புடவையை காண்பித்துள்ளார்.
பள்ளி நேரத்தில் இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக்கூடாது என புடவை வியாபாரி மற்றும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.