மறுப்பு தெரிவித்த பெண் ஆசிரியர் - ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற உறவினர்!
தூத்துக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவரது உறவினரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியை
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் குலசேகரப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அங்கு அவர் தனியாக வாழ்ந்து வருகிறார், இவர் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென அலறல் சத்தம் கேட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்த்தபொழுது ஆசிரியை மெட்டில்டா உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
கொலை
இந்நிலையில், வீட்டின் மொட்டை மாடி பகுதியில் ஆசிரியரின் உறவினரான தீபக் என்பவர் மறைந்திருந்தது தெரியவந்தது, இவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இவர், ஆசிரியை மெட்டில்டாவிடம் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் இவர் ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் தீபக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.