Wednesday, Jul 9, 2025

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இன்றுடன் விசாரணை நிறைவு

thoothukudiinvestigationcompleted shootingincident2018 protestagainststerlite investigationover retiredjusticearunajegatheesan
By Swetha Subash 3 years ago
Report

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 36-வது கட்ட விசாரணையை இன்றுடன் நிறைவு செய்துள்ளது விசாரணை ஆணையம்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு, தடியடி நடத்தப்பட்ட து.

இந்த சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த்னர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இன்றுடன் விசாரணை நிறைவு | Thoothukudi Shooting Incident Investigation Over

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய அந்த வருடமே ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கொண்ட விசாரணை ஆணையம் துவங்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 1,042 பேரிடம் விசாரணை நடைபெற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பீச் ரோடு விருதுநகர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வரும் ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன்,

மொத்தம் 1426 பேருக்கு சம்மன் அனுப்பி, 1,048 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 36-வது கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு செய்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இன்றுடன் விசாரணை நிறைவு | Thoothukudi Shooting Incident Investigation Over

இதில் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் ஏ.டி.ஜி.பி.விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், விசாரணை குறித்த அறிக்கையை அணையம் விரைவில் அரசிடம் ஒப்படைக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.