வயிற்று வழியால் துடித்த சிறுமி, ஆசிரியரால் வந்த வினை - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Sexual harassment
By Vinothini May 21, 2023 11:05 AM GMT
Report

அரியலூர் பகுதியில் பள்ளி மனைவியை அவரது ஆசிரியர் கர்ப்பமாக்கி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

school-teacher-arrested-for-impregnanting-a-girl

இவர் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைகளில் பேசியுள்ளார்.

பின்னர் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். சில நாட்கள் கழித்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ஆசிரியர் கைது

இந்நிலையில், அந்த சிறுமி அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

school-teacher-arrested-for-impregnanting-a-girl

ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த சிறுமி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.