கருக்கலைப்பு மாத்திரையால் பறிபோன +2 மாணவியின் உயிர் - நொருங்கி போன பெற்றோர்!
கருக்கலைப்பு மருந்தை உட்கொண்ட 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் 17 வயதுடைய மகளுடன் வசித்து வந்தார்.
மகள் மல்ல சமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 2 மாதங்களுக்கு முன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிலேயே இருந்த அந்த சிறுமிக்கும், புதுச்சத்திரம் நவனி பகுதியைஅரவிந்திற்கும் (வயது 23) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் முதலில் நட்பாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலாக மாறி இருவரும் நெருங்கிப் பழகி தனிமையிலிருந்துள்ளனர்.
இதனால் கருவுற்று சிறுமி செய்வதறியாமல், வீட்டிற்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முடிவுசெய்துள்ளார். இதற்காகக் கருவைக் கலைக்க மெடிக்கலில் மருந்து வாங்கி உட்கொண்டு இருக்கிறார். இதன் காரணமாகச் சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
கருக்கலைப்பு
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மல்ல சமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுமியின் நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
பின்னர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சிறுமியின் காதலன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
