அரசு பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை - 6 மாணவர்கள் உடல் நசுங்கி பலி!
பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
பள்ளி விபத்து
ராஜஸ்தான், மனோகர் தானா பகுதியில் பிப்லோடி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு வரை வகுப்பறைகள் உள்ளன.
சம்பவத்தன்று பள்ளி வளாகத்தில் உள்ள கட்டத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 60 மாணவர்கள் வரை இருந்தனர். இந்நிலையில் திடீரென்று பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பள்ளியில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
6 பேர் பலி
உடனே அலறல் சத்தம் கேட்டு அருகே வசிக்கும் மக்கள் ஓடிச்சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியாகினர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இந்த பள்ளி கட்டடம் சிதிலமடைந்து பாழைடைந்துள்ளது. இந்த கட்டடத்தை புனரமைக்க பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக அங்கு கனமை பெய்து வந்துள்ளது. இதனால் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.