அனைத்து வசதிகள் இருந்தும் மாணவர்கள் இல்லாத அரசு பள்ளி!
பஞ்சாப் மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் அவலம் நிகழ்ந்துள்ளது.
அரசு பள்ளி
அரசு பள்ளிகளில் பாடத்திட்டத்தை தனியார் நிறுவனங்களுடன் இணையாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு,மத்திய அரசு பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் அரசு தொடக்கப்பள்ளி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 1-5 வரை படிக்கக்கூடிய அரசு தொடக்கப்பள்ளியாக செல்யப்பட்டு வரும் நிலையில், இது வரை எந்த மாணவர்களும் இந்த பள்ளியில் படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் LKG, UKG-ல் மட்டும் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
ஆசிரியர்
இவர்களுக்கு ஆசிரியர் கம்லாஜித் சிங் என்ற ஆசிரியர் ஒருவர் மட்டுமே பாடம் எடுத்து வருகிறார். இது குறித்து ஆசிரியர் கூறுகையில் இந்த பகுதியில்20 மற்றும் 30 வீடுகள் உள்ளனர் . மக்கள்தொகை குறைவாக இருப்பது மட்டுமன்றி, அரசு பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும் மாணவர்கள் தனியார் பள்ளியையே விரும்புவதாக ஆசிரியர் வேதனையுடன் தெரிவித்தார் .
மேலும் பெற்றோர்களை தங்கள் குழந்தைகளை அனுப்ப ஊக்குவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.