பள்ளி நாடகத்தில் கணவன்-மனைவி..நண்பர்கள் கொடுத்த ஐடியா - 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சுவாரஸ்யம்!
பள்ளி நாடகத்தில் கணவன்-மனைவியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சீனா
சீனாவில் ஜெங் என்ற இளைஞர் இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில் , கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். குவாங்டாங் மாகாணத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.அப்போது திருமண விழாவில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்காக வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.அந்த வீடியோவில், புதுமணத் தம்பதிகளின் குழந்தைப் பருவ வீடியோ அது. இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்துள்ளனர். அந்த பள்ளியில் நடத்தப்பட்ட போட்டியில் இருவரும் கணவன் மனைவி போல் வேடமிட்டு நடந்து வருவது போல் நடித்திருந்தனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து காலப்போக்கில் அவர்கள் ஒருவரையொருவர் முற்றிலும் மறந்துவிட்டார்கள். மேலும் 2022 வரை இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை.
திருமணம்
இந்த நிலையில் இளைஞர் ஜெங் நண்பர்கள் பள்ளிப்பருவ புகைப்படத்தை தங்களது குருப்பில் அனுப்பி அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூ கூறியுள்ளனர். மேலும் பள்ளியில் நடந்தகாட்சியை உன்மையாகும் படி கூறியுள்ளனர்
.இதனையடுத்து நண்பர்கள் சொன்னது போல் ஜெங் தனது பள்ளி ஆசிரியர் துணையுடன் அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்துக் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.