பள்ளிக்குள் மாணவர்களுக்கு என்ன நடந்தாலும் பள்ளியே பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பள்ளி நிர்வாகத்தில் மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜுலை 13-ஆம் தேதியன்று மர்மமான முறையில் பள்ளிவளாகத்தில் இறந்தார். மாணவியின் மரனத்தை பற்றி பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோர்களுக்கு சரியாக பதிலளிக்காத காரணத்தால் பள்ளி நிர்வாகமே பொதுமக்களால் சூரையாடப்பட்டது.
இச்சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து கோவையில் இயங்கிவரும் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளிநிர்வாகம் பொறுப்பேற்காது என
பள்ளி நிர்வாகமே பொறுப்பு
மாணவர்களின் பெற்றோற்களிடமிருந்து உறுதிமொழி படிவம் வாங்கப்பட்டதாக புகார்கள் எழுந்திருந்தது. அப்படிவமானது சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகவும் மாறியது.
இதனைத்தொடர்ந்து பள்ளிகல்வித்துறையிலிருந்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் "பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு" என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின் சில தனியார் பள்ளிகள் உறுதிமொழி பத்திரத்தில் பெற்றோரிடம் கையெழுத்து பெறுவதாக புகார் எழுந்தது.
ஆனால் பெற்றோர் தரப்பில் எந்த புகாரும் பதிவாகவில்லை. இதனால் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புகார்கள் பெறப்பட்டு விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில்
சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.