ஜன.20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு முக்கிய அறிவிப்பு!

Delhi India Weather Haryana
By Sumathi Jan 15, 2024 02:37 PM GMT
Report

கடும் குளிர் மற்றும் பனி காரணமாக பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர் 

வட மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசி வருகிறது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

school holiday

அதனைத் தொடர்ந்து, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஞாயிறுக்கு பதில் வெள்ளியில் விடுமுறை அளிக்கும் பள்ளிகள் - அதிர்ச்சியில் அரசு!

ஞாயிறுக்கு பதில் வெள்ளியில் விடுமுறை அளிக்கும் பள்ளிகள் - அதிர்ச்சியில் அரசு!

பள்ளிகள் விடுமுறை

தற்போது, அடுத்த 3 நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ, பல்லியா, கவுதம் புத்த நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.13 வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

ஜன.20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு முக்கிய அறிவிப்பு! | School Leave Till January 20 Govt Announced

இந்நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பனியின் காரணமாக கூடுதலாக விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்ராவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜனவரி 20 ஆம் தேதி வரையும்,

மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.