உறைய வைக்கும் குளிர்; நடுங்கும் மாநிலங்கள் - பள்ளிகளுக்கு விடுமுறை!

Delhi Weather
By Sumathi Jan 09, 2023 04:51 AM GMT
Report

டெல்லியில் கடும் குளிர் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர்

வட மாநிலங்களில் மக்களை உறைய வைக்கும் விதமாக குளிர் அலை வீசி வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கடுமையாக குளிர் அடிக்கும் மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

உறைய வைக்கும் குளிர்; நடுங்கும் மாநிலங்கள் - பள்ளிகளுக்கு விடுமுறை! | Cold Wave Delhi Schools Remains Shut

அதன் வரிசையில், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தட்பவெப்ப நிலை 3-4 டிகிரி செல்சிஸ் அளவுக்கு குறையும் எனவும், பகல் நேர வெப்பம் கூட சராசரியாக 15-17 டிகிரி என்ற அளவில் குறைந்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை

இதனால், டெல்லியில் கடும் குளிர் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு 15ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறையை நீடித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரால் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.