பயங்கர வேகத்தில் சென்ற பள்ளி வேன்...திடீரென கீழே வீசப்பட்ட மாணவிகள் - திகிலூட்டும் காட்சி!

Gujarat Viral Video India Crime School Children
By Swetha Jun 22, 2024 11:30 AM GMT
Report

வேகமாக சென்ற பள்ளி வேனிலிருந்து 2 சிறுமிகள் விழுந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

பள்ளி வேன்...

குஜராத், வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் சாலையில் ஒரு பள்ளி வேன் அதிவேகமாக சென்றது. அப்போது, வேனின் பின்பக்கம் அமர்ந்திருந்த 2 மாணவிகள் கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பயங்கர வேகத்தில் சென்ற பள்ளி வேன்...திடீரென கீழே வீசப்பட்ட மாணவிகள் - திகிலூட்டும் காட்சி! | School Girls Falls From A Van

அந்த வீடியோவில், ஒரு வெள்ளை நிற பள்ளி வேனானது ஒரு குறுகிய தெருவில் ரிவர்ஸ் சென்று உடனடியாக அதிக வேகமாக தெருவில் சென்றுள்ளது. அதில், பின்பக்க கதவு வழியாக இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளி பேக்குடன் குச்சலிட்ட படி கீழே விழுகிறார்கள்.

அங்கு அருகில் இருந்தவர்கள் சிறுமிகளை தங்கள் வீட்டுக்கு தூக்கி செல்கின்றனர். அந்த இரண்டு சிறுமிகளும் படு காயமடைந்து வலியுடன் இருப்பது அந்த வீடியோவில் தெரியும். இந்த சம்பவம் பதிவான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளிக்குள் பயங்கர தாக்குதல் ; முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி - பதைபதைக்கும் காட்சி!

பள்ளிக்குள் பயங்கர தாக்குதல் ; முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி - பதைபதைக்கும் காட்சி!

வீசப்பட்ட மாணவிகள்

அதுமட்டுமின்றி காட்சிகளை பார்த்த பலரது மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பல நெட்டிசன்கள் மாணவர்களின் பாதுகாப்பை நினைத்து கவலைக்குள்ளாகினர். இந்த வேனை ஒட்டிய டிரைவரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பயங்கர வேகத்தில் சென்ற பள்ளி வேன்...திடீரென கீழே வீசப்பட்ட மாணவிகள் - திகிலூட்டும் காட்சி! | School Girls Falls From A Van

அவர் சிறுவர்கள் அமர்ந்திருக்கும் பக்கத்தின் கதவுகளை சரியாக மூடாததால், சிறுமிகள் வெளியே விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து, மாணவர் பாதுகாப்பில் குஜராத் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.