பள்ளியில் பர்த்டே பார்ட்டி.. வகுப்பறையில் மது அருந்திய 7 மாணவிகள் - ஆடிப்போன ஆசிரியர்கள்!

Tamil nadu Dindigul
By Vinothini Sep 03, 2023 05:24 AM GMT
Report

பள்ளி மாணவிகள் வகுப்பறையில் மது அருந்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த மாதம் 16ம் தேதி பிறந்தநாள் வந்துள்ளது.

school-girls-drunk-in-class

இதனால் மாணவியின் பிறந்தநாளை சக மாணவிகள் கொண்டாட முடிவு செய்தனர். அதனால் பீர் பாட்டில்கள், ஜூஸ், கேக், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு மதிய இடைவேளையில், யாரும் இல்லாதபொழுது பிறந்தநாள் மாணவி உள்பட 7 மாணவிகள் பங்கேற்று ஆட்டம், பாட்டத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை சியர்ஸ் சொல்லி கொண்டாடியுள்ளனர்.

ஆசிரியர்கள் அதிரடி

இந்நிலையில், அங்கு திடீரென வந்த மாணவர்கள் மாணவிகளின் ஆட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் சென்று மாணவிகளின் இந்த செயல் குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட 7 மாணவிகளையும் அழைத்து கண்டித்தார்.

school-girls-drunk-in-class

மேலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், 7 மாணவிகளையும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அதில் ஒரு மாணவி கடந்த மாதம் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை மோசமானது. இதனால் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.