‘குடிச்சா வாசனை வருமாடி?’ - ஓடும் பேருந்தில் பீர் குடித்துவிட்டு ரகளை செய்த பள்ளி மாணவிகள்
ஓடும் பேருந்தில் பீர் குடித்துவிட்டு பள்ளி மாணவிகள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்கிறார்கள்.
இந்நிலையில் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்தபோது ‘பீர்’ குடித்து ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
34 வினாடிகள் பதிவாகியிருக்கும் இந்த வீடியோ காட்சியில் மாணவி ஒருவர் பீர் பாட்டிலை அசால்டாக கையில் எடுத்து குடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து மற்ற மாணவிகளும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என கேட்டுவிட்டு எந்தவித தயக்கமும் இன்றி ஒருவர் பின் ஒருவர் பீரை குடித்துவிட்டு பேருந்தில் கூச்சலிட்டு ரகளை செய்கின்றனர்.
இந்த காட்சியை மாணவி ஒருவரே வீடியோவாக பதிவு செய்ய அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் கல்வித்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.