பள்ளியில் மாணவிக்கு நடந்த வளைகாப்பு..வைரலான ரீல்ஸ் வீடியோ - அடுத்து நடந்த சம்பவம்!
பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வளைகாப்பு
வேலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பகிர்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.
அதில் சில மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து பகிர்ந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தம்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என கூறினர்.
பிறகு இது தொடர்பாக அம்மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களுடன் அவசர கூட்டம் நடந்தது. அதில், ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
ரீல்ஸ் வீடியோ
அதாவது, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் புத்தகப்பைகளில் கத்தி, செல்போன் போன்று தேவையில்லாத பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால், அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர் இருக்க வேண்டும். பள்ளிகளில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல், வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும். மேலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்கள் எடுத்து வர கூடாது. என்று தெரிவித்துள்ளனர்.