வகுப்பறையில் பேசிக்கொண்டு இருந்த மாணவி.. திடீரென மயங்கி விழுந்து பலி - என்ன நடந்தது?
வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல்லியப்பா நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(39). இவர் அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காவியா மற்றும் ஈஷா அத்விதா (14) என்ற இரு மகள்கள் உள்ளன.
இதில் இளைய மகள் ஈஷா அத்விதா சுமைதாங்கி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு காலையில் சென்றுள்ளார்.
என்ன நடந்தது?
பிறகு வகுப்பறையில், அமர்ந்து சக மாணவிகளுடன் பேசிக்கொண்டு இருந்த ஈஷா திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரின் அங்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், உயிரிழந்த மாணவிக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததாகவும், இதன் காரணமாக இறந்துள்ளதாகவும் தெரியவந்தது. இந்த சூழலில், பள்ளி வகுப்பறையிலேயே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளப்பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.