10 கிலோ உணவு சேலஞ்ச்; 120 கிலோ எடை - லைவ்வில் பிரபல யூடியூபர் வயிறு சிதைந்து பலி!
பிரபல யூடியூபரின் வயிறு சிதைந்து லைவ் வீடியோவில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு சேலஞ்ச்
சீனாவைச் சேர்ந்தவர் பிரபல பெண் யூடியூபர் பான் ஜியோடிங்(24). இவர் உணவு ரிவ்யூ செய்வது, உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உள்ளிட்டவைகளை செய்து வந்தார்.
அவ்வாறு அதிகமான உணவுகளை உட்கொண்டதால் அவருடைய உடல் எடை (120 கிலோ) அதிகரித்தது. இதனால், உணவு செரிமான கோளாறு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
யூடியூபர் பலி
அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே உணவு சேலஞ்ச் என்ற லைவ் வீடியோவை வெளியிட்டார். அதில், சுமார் 10 கிலோ எடையுள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டார். அப்போது திடீரென லைவிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
அதிகமான உணவுகளை சாப்பிட்டதும் அவை செரிக்காமல் இருந்தது தான் அவர் இறப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்த அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும் செரிமானம் ஏற்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.