விமான சாகச நிகழ்ச்சி; நொடியில் நேர்ந்த விபத்தில் விமானி பலி - பரபரப்பு காட்சிகள்!
போர்ச்சுகலில் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
விமான சாகசம்
போர்ச்சுகல் நாட்டின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பெஜா விமான காட்சி என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 6 சிறிய ரக விமானங்கள் வானில் வரிசையாக பறந்து சென்றன.
அப்போது, எதிர்பாராத விதமாக பறந்து கொண்டு இருந்த 6 விமானங்களில் ஒன்று மேலே எழும்பி சென்று மற்றொரு விமானத்தின் மீது மோதியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இதில், மற்றொரு விமானத்தின் மீது மோதி விட்டு தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
விமானி பலி
அதிலிருந்த விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.அவசரகால சேவை துறையினரும் மீட்பு பணிக்காக விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர்.
இந்த நிலையில்,தெற்கு ஐரோப்பாவில், மிக பெரிய விமான சாகச நிகழ்ச்சியாக இதனை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர் என போர்ச்சுகீசிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Beja Air Show accident ?? DEP pic.twitter.com/4WrRfoLCeO
— Don Expensive ?? ✞ ? (@kar0____) June 2, 2024