நேபாள விமான விபத்து; 40 பேர் உயிரிழப்பு - மீட்பு பணிகள் தீவிரம்
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் சென்ற விமானம் இன்று காலை பொகாராவில் விழுந்து நொறுங்கியதில் நேபாளத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான விபத்து
இடிபாடுகளில் இருந்து இதுவரை 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் விபத்துக்குள்ளான விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர்.
எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சென்று கொண்டிருந்தது.
எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், "2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் விமானத்தில் இருந்தனர். 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஒரு ஐரிஷ், 2 கொரியர்கள், 1 அர்ஜென்டினா மற்றும் ஒரு பிரெஞ்சு நாட்டவர் விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் இரங்கல்
நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (CAAN) படி, விமானம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.
இந்த விமானம் பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அருகில் இருந்தபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள ஆற்றுப் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்தது, விமானம் கீழே இறங்கியிருக்கலாம். இரண்டு நகரங்களுக்கு இடையேயான விமான நேரம் 25 நிமிடங்கள். "உயிர் பிழைத்தவர்களா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா செய்தி நிறுவனமான AFP இடம் கூறினார்.
விமானம் விபத்துக்குள்ளானதால் தீப்பிடித்தது, மீட்புப் பணியாளர்கள் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார்.
The loss of lives in a tragic plane crash in Nepal is extremely unfortunate. My thoughts & prayers are with the families of the bereaved. Om Shanti.
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) January 15, 2023
"நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில் உயிர் இழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. ஓம் சாந்தி" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.