11ஆம் வகுப்பு மாணவிக்கு குறைபிரசவம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி கர்ப்பம்
திருச்சி, பீமநகரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் பக்கத்து தெருவில் முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்தச் சிறுமி தாய் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அடிக்கடி சென்றுள்ளார்.
அப்போது, அருகில் வேலை பார்த்து வந்த அரியமங்கலத்தைச் சேர்ந்த அஜித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து, மாணவியை அஜித் தனது பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
காதலன் தலைமறைவு
இதனால் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வீட்டிலேயே குறை பிரசவம் நடந்துள்ளது. அதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடனே சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்ததில் குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின், இதற்கு காரணமான அஜித் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.