பாதம் இல்லாமல் கொம்பு காலுடன் பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் மருத்துவர்கள்
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்பூர் மாவட்டத்தில் உள்ள மணிப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதம் இல்லாமல் கொம்பு காலுடன் பிறந்த குழந்தையை கண்டு மருத்துவர்கள் மற்றும் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
பாதம் இல்லாமல் பிறந்த குழந்தை
ஆகஸ்ட் 26 ஆம் தேதி மணிப்புரா ஆரம்ப சுகாதார மையத்தில் பாதங்களின்றி கொம்பு காலுடன் குழந்தை பிறந்தது. போதிய வளர்ச்சியின்றி பிறந்த குழந்தை 1.4 கிலோ எடை மட்டுமே இருந்தது.
இதையடுத்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஷிவ்புரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை குறைபாடுகளுடன் பிறந்ததற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்து வருகின்றனர்.
முதற்கட்டமாக குழந்தையின் தாயின் வயிற்றில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கொம்பு காலுடன் பிறந்த குழந்தையின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.