வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவி..ஓங்கி அறைந்த ஆசிரியர் - அடுத்து நேர்ந்த கொடூரம்!
வீட்டுப்பாடம் செய்யாத சிறுமியை ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி..
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் இயங்கி வரும் அரசுப் பள்ளியொன்றில் சிறுமி ஒருவர் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அன்றைய தினத்திற்கு கொடுத்த வீட்டுப்பாடத்தை அவர் முடிக்காமல் பள்ளிக்கு வந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார் என்ற ஆசிரியர் சிறுமியின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். அப்போது சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.
வீட்டுப்பாடம்
இதையடுத்து, அதே பள்ளியில் பணிபுரிந்து வந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற அந்த சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, ஆனால் இந்த கொடுரத்தை செய்த பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. எனினும், சக ஆசிரியை பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.