திடீரென மணமகளின் தாய், தந்தையை அறைந்த மணமகன் - அடுத்து நடந்த பகீர் சம்பவம்!
திருமணத்தின் போது மணமகளின் தாய், தந்தையை மணமகன் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதை
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் திலீப் (25) என்பவருக்கும் அஞ்சலி (18) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணச் சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி நடந்துகொண்டு இருந்தது.
அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் திலீப், திடீரென அஞ்சலியின் தாய் மற்றும் தந்தையை அறைந்தார். இந்த சம்பவத்தால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் அஞ்சலி, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
பரபரப்பு சம்பவம்
அதன் பேரில் அங்கு வந்த போலீசார் திலீப் மற்றும் அவரது சகோதரர் தீபக், மாமா மாதா பிரசாத் மற்றும் தந்தை ராம்கிரிபால் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உறவினர்கள் மற்றும் போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு,
இரு தரப்பினரும் திருமணத்திற்கு
சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமண சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.