பள்ளியின் பிரேயரில் மயங்கி விழுந்த 13 வயது மாணவி - அந்த கணமே உயிரிழந்த சோகம்!
தனியார் பள்ளியில் பிரேயரில் திடீரென மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 வயது மாணவி
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் காந்தேஸ்வரி, இவருக்கு 13 வயதாகிய நிலையில் இவர் அவிநாசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இடது காலில் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு வீக்கம் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு
இந்நிலையில், அந்த தனியார் பள்ளியில் நேற்று வழக்கம்போல் இறைவணக்கம் முடிந்துதும் வகுப்பிற்கு சென்ற மாணவி காந்தேஸ்வரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இவரது உடலை கண்ட பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாணவி இறந்ததன் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.