கள்ளக்குறிச்சி கலவரம் : சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் அமைச்சர்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் அமைச்சர்கள் ஆய்வு மேற்க்கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராடட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர். கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்.
இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கலவரத்தில் தொடர்புடையதாக 320க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர் ,அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், கணேசன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர்.